Tuesday, November 03, 2009

புவியின் விசை: திராவிட, ஆரிய அரசியலும் நீதியும்

Sunday, March 02, 2008

தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

(தமிழ்நாட்டில் சமய குரவர்கள் பாடிய தேவார திருவாசகத்தை சிதம்பரம் கோயில் அம்பலத்தில் நின்று பாட தீட்சதகர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக தடை செய்து வருகிறார்கள். கோயில் கட்டியவன் தமிழன். சிற்பங்களைச் செதுக்கியவன் தமிழன். ஓவியங்களைத் தீட்டியவன் தமிழன். ஆனால் அவனால் கர்ப்பககிரகத்தின் உள்ளே அல்ல வெளியில் அம்பலத்தில் நின்று தேவாரம் திருவாசகம் பாட முடியாத இழிநிலை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. கோயிலும் இந்துக் கடவுளரும் சமற்கிருதமும் தமிழருக்கு அந்நியமானவை. தமிழன் ஆரியரின் கற்பனைக் கடவுளரை உண்மைக் கடவுள்கள் என நினைத்து அர்ச்சனை, அபிசேம், தேர், திர்த்தம், திருவிழா செய்து தனது பொருளையும் காலத்தையும் வீணாகச் செலவழிக்கிறான்.

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை இல்லை. தமிழிலும் அர்ச்சனை என்ற அறிவித்தல் பலகைதான் கோயிலகளில் வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யமாட்டார்கள். கேட்டால். சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மந்திரம் உண்டு தமிழிமொழிக்கு அந்த ஆற்றல் கிடையாது என்கிறார்கள்.

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பியர் 2,500 ஆண்டுகளுக'கு மந்திரம் என்றால் என்ன என வரைவிலக்கணம் வகுத்திருப்பது பலருக்குத் தெரியாதிருக்கிறது. . இதே நிலை ஆங்கில மொழிக்கும் ஒரு காலத்தில் இருந்ததை நாம் அறிய வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மேட்டுக் குடிகளின் மொழியாகவும்- வழிப்பாட்டு மொழியாகவும் இலத்தீன் இருந்தது. அப்போது மக்களின் மொழியாக இருந்த ஆங்கிலத்தில் வழிபாடு செய்யவேண்டும் அல்லது உயர்கல்வி பயில வேண்டும் என்று யாராவது சொன்னால் அவர் அரசின் எதிரியாகவும், மதத்தின் விரோதியாகவும் கருதப்பட்டார்.

பொதுமக்களிடம் இது குறித்து பய உணர்வு பரவி இருந்ததாக வரலாறு கூறுகிறது.

முதலாவது எலிசபெத்தின் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. எட்டாம் ஹென்றி ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாகத் திருமணம் செய்து இராணியாக்குவதற்கு அனுமதி கேட்டு சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரிடம் விண்ணப்பித்தான்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையாக மணந்த மனைவியை மணமுறிவு செய்தல் மத விரோதமானது. ஆதலின், பாப்பரசர் எட்டாம் ஹென்றி மன்னன் மறுமணம் செய்வதற்கு ஒப்புதல் கொடுகக மறுத்தார். இதனால் வெகுண்டெழுந்த மன்னன் உரோம் நாட்டு பாப்பரசருட்ன் இருந்த கத்தோலிக்க சமயத் தொடர்பை அறுததுக் கொண்டு ஆங்கில திருச்சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பைத் தானே எடுத்துக் கொண்டான்.

அடுத்து வழிபாட்டை இலத்தீனில் இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றினான். பாதிரிமார்கள் ஆறு மாதத்துக்குள் ஆங்கிலத்தில் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தவறினால் அவர்களது சீருடை களையப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் படுவர் என எச்சரிக்கை செய்தான். இதனால் இலத்தீன் ஒழிந்து ஆங்கில வழிபாடு நடைமுறைக்கு வந்தது. இது போலவே தமிழக அரசு தமிழை வழிபாட்டு மொழியாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்ள மாட்டார். அவருக்கு மொழிச்சிக்கல் இல்லை. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் சொற்றமிழில் எனைப் பாடுக" என சுந்தரரை சிவன் கேட்பதாகச் சேக்கிழார் பாடியிருக்கிறார். நாயன்மார்கள் ஆரியம் கண்டாய் தமிழ் கண்டாய் என்றுதான் பாடியிருக்கிறார்கள.
(Nakkeeran)

தடுத்த தீக்ஷிதர்கள்-சிதம்பரத்தில் பரபரப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலமேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்சிதர்கள் தடை போட்டனர்.இதையடுத்து உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை பாடலாம் என அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.கோவிலில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஆறுமுகச்சாமி தலைமையில் உள்ளே சென்ற ஓதுவார்கள், திருச்சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரம் பாட முயன்றனர். ஆனால் அவர்களை தீக்சிதர்கள் கும்பலாக வந்து தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து எஸ்.பி. பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தடுத்தனர். மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் போக வேண்டும் என்று கூறினர்.இதையடுத்து மேல் சட்டையைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்த போலீஸார், அங்கு தகராறு செய்த தீக்சிதர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து கோவிலுக்கு வெளியே விட்டனர்.இதைத் தொடர்ந்து ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியும், பக்திப் பரவசமுமாக தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடி மகிழ்ந்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. (thats tamil)

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம்-அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர்.இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தேவாரம் பாடலாம், ஆனால் மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர்.இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.இதையடுத்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, கால பூஜை முடிந்த பின்னர், அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி 30 நிமிடங்களுக்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம். யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் இவற்றைப் பாடலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடப் போவது குறித்து முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.இதன் மூலம் இதுவரை தேவாரம், திருமறை ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாமல் தவித்த வந்த பக்தர்களுக்கு பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தீக்ஷிதர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாக கூறிப் பல்வேறு சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.

சிறிய சைப்பிரஸ் தீவில் இரண்டு சுதந்திர நாடுகள்!
கொசேவோவின் ஒரு தலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பல நாடுகளின் அடி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக பெரும்பான்மை தேசிய இனத்தவரின் மேலாண்மையையும் அடக்குமுறையையும் கொடுங்கோல் ஆட்சியையும் திணிக்கும் நாடுகள் மத்தியில் இந்தப் பயம் குடி கொண்டுள்ளது.
அதே சமயம் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
கொசோவோவை ஒரு இறையாண்மை படைத்த நாடாக மேற்குலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு அங்கீகாரம் வழங்கியது பன்னாட்டு அரசியலில் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு அரசியலில் பல முக்கியமான பாடங்களைப் புகட்டியுள்ளது.
முதலாவது பாடம் - அய்க்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் பெரிய நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளைக் கட்டுப்படுத்த உதவாது.
இரண்டாவது பாடம் - நாடுகள் தங்கள் வலிமை, தங்களது நட்பு நாடுகளின் வலிமை, பகை நாடுகளின் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
மூன்றாவது பாடம் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவருக்கு விடுதலை வீரனாகக் காட்சி அளிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான்காவது பாடம் - ஒரு நாட்டின் இறைமை என்பது கட்டற்றது (Not Absolute) அன்று.
ஒரு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் கல்வெட்டில் எழுதிய எழுத்துக்கள் அல்ல. எல்லைகளும் மீள வரைய முடியாதவை அல்ல. ஆனால் இந்த அரசியல் பாடங்களை ஸ்ரீலங்கா வேண்டுமென்றே படிக்க மறுக்கிறது.
ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சு ஒருபடி மேலே போய் கொசோவோ சுதந்திரம் அடைந்ததைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுதுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டந்தான் அதற்குக் காரணம்.
(அ) கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் சேர்பிய பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் செய்யப்படவில்லை.
(ஆ) யூன் 10, 2008 இல் நிறைவேற்றப்பட்ட அய்க்கிய நாடுகளின் பாகாப்பு அவையின் தீர்மானம் 1224 எல்லா நாடுகளது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்வதாகக் கூறுகிறது. ஆனால் அது மீறப்பட்டுள்ளது.
(இ) பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் படி கொசோவோவின் எதிர்காலத் தகுதி பற்றி பேச்சு வார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவது என்பது முற்றாகப் பேசி முடிவு எட்டப்படவில்லை.
(ஈ) கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு உறவுகளைப் பேணுவதில், பன்னாட்டு இறையாண்மை படைத்த நாடுகளை மதிப்பதில் தவறியுள்ளது.
(உ) பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது. “கொசோவோவின் ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக அமைந்துள்ளது” என ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது நகைப்புக்குரியது.
ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது போல் இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் புதிய நாடுகள் தோன்றியிருப்பது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக அவை அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழி கோலியுள்ளது. கடந்த கால உலக வரலாற்றை காய்தல் உவத்தில் இன்றிப் படிப்போர் புதிய நாடுகளின் தோற்றம் உலக அமைதியை உருவாக்க உதவியுள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்கள்!
அய்க்கிய நாடுகள் நிறுவப்பட்ட போது அதன் உறுப்புரிமை 50 மட்டுமே. இன்று அந்த எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக அமைதியும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளவேயொழிய குறையவில்லை!
குட்டிக் குட்டி நாடுகள், தமிழீழத்தைவிட அளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த சுமார் 50 நாடுகள் சுதந்திர நாடுகளாக அய்க்கிய நாடுகள் அவையில் கொலு வீற்றிருக்கின்றன.சைப்பிரஸ் நாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்பிரஸ். சைப்பிரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள்.
சைப்பிரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.
சைபிரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்பிரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது கொலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது கொலனி நாடாக வைத்துக் கொண்டது. முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்பிரஸ் தீவைக் கைப்பற்றியது.
1925 இல் சைப்பிரஸ் பிரித்தானியாவின் கொலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைப்பிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள். சைப்பிரஸ் தீவு கிரேகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள்.
1955 இல் சைப்பிரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது. 1958 இல் ஆயர் மாகாறியோஸ் (Archibishop Markarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்பிரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார்.
இதே சமயம் சைப்பிரஸ் துருக்கியர்கள் சைப்பிரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். சைப்பிரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது.
கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள். ஆயர் மாகாறியோஸ் சைப்பிரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் - துருக்கியர் மத்தியில் சண்டை தொடங்கியது.
1965 இல் அய்க்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது.
1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்பிரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.
யூலை 20 இல் துருக்கி சைப்பிரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது.
இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.
1974 யூலை 22 இல் அய்க்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு சைப்பிரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் அய்க்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.
1983 நொவெம்பர் 15 இல் துருக்கி சைப்பிரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் அய்யன்னா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது.
இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு அய்யன்னா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்பிரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது.
இப்போது 2008, பெப்ரவரியில் கிரேக்க சைப்பிரஸ் ஆட்சித் தலைவர் தேர்தலில் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட Dimitris Christofias என்பவர் 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் சைப்பிரஸ் தீவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
சைப்பிரஸ் பற்றிய தரவுகள்
மொத்த நிலப்பரப்பு - 9,250 சகிமீ (3,355 சகிமீ வட சைப்பிரஸ்)
பருவம் - வெப்பமான கோடை குளிர்மையான மாரிவளங்கள் - செப்பு, கனிக்கல் (gypsum) மரப்பலகை, உப்பு, பளிங்குக் கல், செந்நிறக் களிமண்
மொத்த மக்கள் தொகை - 788,457 (யூலை 2007 மதிப்பீடு)
இனங்கள் - 77 விழுக்காடு கிரேக்கர், 18 விழுக்காடு துருக்கியர் எனையவர் 5 விழுக்காடு (2001) சமயம் - கிரேக்க பழமைவாத சமயம் 78 விழுக்காடு, முஸ்லிம் 18 விழுக்காடு ஏனையவர்கள் 4 விழுக்காடு
நாணயம் - யூறோ
மொழி - கிரேக்கம், ஆங்கிலம்
தலைநகர் - நிக்கோசியா
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் – 210,000 (30 ஆண்டுகளாக கிரேக்கர் மற்றும் துருக்கியர்)
கொசோவோ போலவே சைப்பிரசிலும் வெவ்வேறு இன, மொழி, சமயம் சார்ந்தோர் ஒன்றாக இருக்க முடியாத என்ற உண்மை தெரிகிறது. பிரிந்து சென்றால்தான் இரண்டு இனங்களுக்கு மத்தியில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும். நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
இறைமை என்பது மக்களுக்குச் சொந்தமானது. இந்த உண்மையை மேற்குலக நாடுகள் கொசோவோ நாட்டைப் பொறுத்தளவில் ஒத்துக் கொண்டுள்ளன. தமிழீழ மக்களின் இறைமையையும் மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய நாடுகளுக்கும் அந்தக் கோட்பாடு விரிவு படுத்தப் பட வேண்டும்.
எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும் என்பார்கள்.
சுதந்திரத்துக்காகப் போராடி வரும் திபேத், தமிழீழம், பாஸ்க், கஷ்மீர், அசாம், நாகலாந்து, தாய்வான் போன்ற நாடுகளில் நேரடி வாக்கெடுப்பு நடத்தி மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அந்த நாட்டு மக்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்;பட வேண்டும்.

Labels:

Tuesday, September 05, 2006

மகிந்த இராசபக்சேயை அய்யன்னா எப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போகிறது?

லெபனன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தரை, கடல், வான் தாக்குதல் மூலம் லெபனனின் கட்டுமானம் முற்றாக நிர்மூலமாகியது.

வீடுவாசல்கள், தொடர்மாடிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பாலங்கள், சாலைகள் எல்லாம் கண்மூடித்தனமான வான் தாக்குதலுக்கு இலக்காகியது.
நிலத்தடி சுரங்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நாஸ்ரல்லா (Seik Hassan Nasrallah) பதுங்கி இருக்கக் கூடும் என ஊகிக்கப்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கொத்தணி குண்டுகளை (Cluster bombs) வீசியது. அமெரிக்க தயாரிப்பான இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 50-100 கிலோ எடை கொண்டது. நீளம் 1.42 அடி. உயரம் 1.75 அடி. அகலம் 1.75 அடி. நிலத்துக்கு மேலே 10,000 மீட்டர் உயரத்தில் விமானத்தில் இருந்து போடும் போது 50 மீட்டர் உயரத்தில் வெடித்து 200 - 600 கும் அதிகமான குட்டிக் குண்டுகளாகப் பறக்கின்றன. குட்டிக் குண்டுகள் பார்ப்பதற்கு கொக்கோ கோலா தகரடப்பாக்கள் போல இருக்கும்.

அமெரிக்காவும் சர்ச்சைக்குரிய இவ் வகையான குண்டுகளை இராக், ஆப்கனிஸ்தான், சேர்பியா போன்ற நாடுகளில் பயன்படுத்தியது. இராக்கில் மட்டும் 13,000 கொத்தணிக் குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதிலிருந்து வெடித்துச் சிதறிய குட்டிக் குண்டுகளின் எண்ணிக்கை 1.9 மில்லியன் (19 இலக்கம்) ஆகும்!

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை யூலை 12 தொடங்கி யுத்த நிறுத்தம் ஏற்பட்ட ஆகஸ்ட் 14 வரை (34 நாள்கள்) லெபனன் மீது 7,000 வான்படைத் தாக்குதலையும் 2,500 கடற்படைத் தாக்குதலையும் நடத்தியதாக அறிவித்தது.
யூனிசெப் 1,183 லிபனன் குடிமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் ஆவர். தகர்க்கப்பட்ட குடிமனைகள் 15,000 எனவும் இடம்பெயர்ந்த மக்கள் தொகை 970,000 எனவும் அது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் லெபனன் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை, அளவுக்கு மீறிய தாக்குதலை அமெரிக்காவும் பிரித்தானியாவும் தற்பாதுபாப்புத் தாக்குதல் என நியாயப்படுத்தியன. கனடிய பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் "அளவான பதிலடி" (Measured response) என வருணித்தார். அய்ரோப்பிய ஒன்றியம், உருசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேல் நடாத்திய தாக்குதலைக் கண்டிக்க மறுத்தன. அல்லது மறந்தன.

ஒரு நாடு இன்னொரு இறைமை படைத்த நாட்டின் மீது இப்படியான கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தலாமா? போர் பற்றிய பன்னாட்டு சட்ட திட்டங்களின் கீழ் இந்தத் தாக்குதல் போர்க் குற்றங்கள் (War criminals) உசiஅநள) ஆகாதா? என நீங்கள் கேட்கக் கூடும்.

ஆம், இஸ்ரேல் லெபனன் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் போர்க் குற்றங்கள்தான் என அனைத்துலக மன்னிப்பு அவை அடித்துச் சொல்கிறது.
அனைத்துலக மன்னிப்பு அவை விடுத்துள்ள அறிக்கையில் லெபனன் நாட்டுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அந்த நாட்டுப் பொதுக் கட்டுமானத்தை (civilian infra-structure) வேண்டும் என்றே தாக்கியதாகவும் அந்தத் தாக்குதல்கள் பன்னாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணானவை எனவும் அவை போர்க் குற்றங்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக மன்னிப்பு அவை தனது அறிக்கையில் கைக்குக் கிடைத்த தொடக்க சான்றுகளைக் கொண்டும், தாக்குதலின் பரப்பு மற்றும் நோக்கம், உயிர் இழப்பு, உடமை இழப்பு மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளது கூற்றுக்கள் ஆகியவை வைத்து நோக்குமிடத்து குறிப்பிட்ட அழிவுகள் இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு கூறாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்றும் அவற்றை "சமாந்தர சேதம்" (collateral damage) எனச் சொல்ல முடியாதென்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான சண்டையைத் தொடக்க முதல் கண்காணித்த மன்னிப்பு அவை பொதுமக்கள் மீது நேரடியான தாக்குதல்கள் மற்றும் கண்மூடித்தனமான, அளவுக்கு மீறிய தாக்குதல்கள் மூலம் பன்னாட்டு சட்ட திட்டங்களை மீறியுள்ளது (Israel violated international laws banning direct attacks on civilians and barring indiscriminate and disproportionate attacks) எனச் சொல்கிறது.

அனைத்துலக மன்னிப்பு அவை இஸ்ரேல் லெபனன் மீது மேற்கொண்ட தாக்குதலின் போது பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறியுள்ளதா? இல்லையா? என்பதைப் பார்க்குமாறு அய்யன்னாவைக் கேட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்பு அவை இஸ்ரேல் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளது என விடுத்துள்ள அறிக்கையைப் பாராட்டும் அதே வேளை அந்த அமைப்பு இலங்கையில் ஸ்ரீலங்கா அரசு இழைத்த, இழைக்கின்ற போர்க் குற்றங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஏன் மவுனம் சாதிக்கிறது? என்பது விளங்கவில்லை.

மனிதவுரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அனைத்துலக மன்னிப்பு அவை அநீதி எங்கே இழைக்கப்பட்டாலும், போர்க் குற்றங்கள் எங்கு இடம் பெற்றாலும் அவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும்.

லெபனன் மக்களுக்கு ஒரு நீதி தமிழீழ மக்களுக்கு இன்னொரு நீதி என அந்த அவை நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்தால் அதன் நம்பகத்தன்மை அல்லது நடுநிலைமை கேள்விக் குறியாகி விடும்.

மகிந்த இராசபக்சே ஸ்ரீலங்காவின் ஆட்சித்தலைவராக கடந்த நொவெம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த பின்னர் சிங்களப் படையினர் தமிழ்ப் பெருநிலப் பரப்பைத் தாக்கி முற்றாக அழித்து வருகிறார்கள். அப்பாவி பொதுமக்களை இரக்கம் சிறிதுமின்றி கொன்று குவிக்கிறார்கள். பாலியல் வன்முறை, காணாமல் போவது, ஆள்க்; கடத்தல், கைது நாளும் பொழுதும் அதிகரித்தவண்ணம் உள்ளன.

மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் இனப் படுகொலைகள் தமிழர்கள் வாழும் வட - கிழக்கு நிலப்பரப்பில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரங்கேறப்படுகின்றன.

தமிழீழத்தில் இருந்து 11,000 கும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு ஆபத்தான கடல் பயணத்தையும் பொருட்படுத்தாது ஏதிலிகளாக ஓடிப் போயிருக்கிறார்கள். 200,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
வி.புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று ஏட்டளவிலேயே உள்ளது.

திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருப்பது அப்பட்டமான யுத்த மீறலாகும். அங்கு நடந்த சண்டையின் போது மேற்கொண்ட குண்டு வீச்சு எறிகணைத் தாக்குதலில் 100 கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள், 40,000 கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். சம்பூரும் அதனை அண்டியுள்ள ஊர்களும் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. மக்களது குடிமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக் கட்டிடங்கள் ஒன்றுமே தப்பவில்லை.

ஸ்ரீலங்காவின் முப்படைகளின் முதன்மைத் தளபதி என்ற அடிப்படையில் ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு ஹேக்கில் இயங்கும் அனைத்துலக நீதிமன்றத்தித்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத் தீவு மாவட்ட செஞ்சோலை வளாகத்தின் மீது 4 கிபீர் விமானங்கள் 16 குண்டுகளைப் போட்டதில் 51 மாணவிகளும் 4 ஊழியர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். 129 மாணவிகள் காயப்பட்டார்கள். பலர் கால் கைகளை இழந்தார்கள்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட படுகொலை "காட்டுமிராண்டித்தனமான, நாகரிகம் மற்றும் மனிதாபிமானமற்ற வெறியாட்டம்" ("Atrocious, uncivilized and inhuman") என வருணிக்கப்பட்டது.

இந்தக் குண்டு வீச்சை ஸ்ரீலங்கா அரசு மறுக்கவில்லை. "குண்டு போட்ட இடம் வி.புலிகளின் பயிற்சிப் பாசறை, கொல்லப்பட்டவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வி.புலிப் போராளிகள், வி.புலிப் போராளிகளை இலக்கு வைத்துக் கொல்லும் போது நாங்கள் பால் வயது போன்றவற்றைப் பார்ப்பதில்லை" எனப் பாதுகாப்புத் தொடர்பாக பேசக் கூடிய அமைச்சர் கேகலிய இரம்புக்வெல திமிரோடு பேசியிருந்தார்.

மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் (16 தமிழர்கள், 1 முஸ்லிம்) ஆகஸ்ட் 3 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இப்படுகொலை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் படுகொலைக்குச் சிறிலங்கா இராணுவமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது ஒரு படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் வருணித்துள்ளார்.

"இந்தச் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச் சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு மேலும் தெரிவித்தது.

"போல்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்று இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறினார்.

"மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை, வேறு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

போல்கன் நாடுகளில் இடம் பெற்ற போர்க் குற்றங்களுக்கு சேர்பியாவின் ஆட்சித் தலைவர் Slobodan Milosevic கைது செய்யப்பட்டு பன்னாட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

ஆகஸ்ட் 20, 2006 – கத்தோலிக்க அடிகளார் ஜிம் பிரவுண் அவர்களும் அவரது உதவியாளர் 5 பிள்ளைகளது தந்தை விமலதாசும் அல்லைப்பிட்டியில் காணமால் போயுள்ளார்கள். அல்லைப்பிட்டி ஸ்ரீலங்கா அரசாங்கக் கட்;டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியைச் சேர்ந்த இடமாகும். அல்லைப்பிட்டி கடற்படை முகாமின் தளபதி நிஷாந்தா ஜிம் பிரவுண்; அடிகளார் கத்தோலிக்க தேவாலயத்தைச் சுற்றி வி. புலிகள் பதுங்கு குழிகள் வெட்ட ஒத்தாசை செய்தார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 25 கும் அதிகமான பொதுமக்கள் சிங்கள இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளார்கள். பிரேத விசாரணைக்கு அல்லைப்பிட்டிக்குச் சென்ற யாழ்ப்பாண நீதிபதி கடற்படையினரால் தடுக்கப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார்.

யூன் 8, 2006 - மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் என்போர் மிகவும் குரூரமான முறையில் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட பின்னர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர். சின்னையா மூர்த்தி மாட்டின் (35) அந்தோனி மேரி மடலின் (27) ஆன் லக்ஷிகா (9) ஆன் டிலக்ஷன் (7) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர் ஆவர். இதில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 13, 2006 - யாழ்ப்பாண மாவட்டம், மண்டதீவைச் சேர்ந்த 13 தமிழர்கள் கடற்படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படையினராலும் (para militaries) கொலை செய்யப்பட்டார்கள். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை (4 அகவை) பிள்ளை (9 அகவை) அடங்குவர்.

மே 06, 2006 - யாழ்ப்பாண மாவட்டம், மந்துவில். கோயில் ஒன்றில் இரவு தங்கிய 8 தமிழர்கள் காணாமல் போனார்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் சிங்கள இராணுவ முகாம் இருக்கிறது. கோயிலைச் சுற்றி சப்பாத்துக் கால் அடையாளங்கள், குருதி காணப்பட்டது.

சனவரி 02, 2006 – திருகோணமலைக் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்த 5 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் எந்த முகாந்திரம் இல்லாது பாதுகாப்புப் படையினரால் மிக அண்மையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. ஒரு சில நிகழ்வுகளையே மேலே அட்டவணைப் படுத்தியுள்ளேன். இந்தக் கொலைகள் தொடர்பாக யாரையும் காவல்துறை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கைது செய்யப்படவும் இல்லை.

போர்க் குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இவை போதுமானவை என நினைக்கிறேன்.

கேள்வி என்னவென்றால் அனைத்துலக மன்னிப்பு அவை ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றங்கள் இழைத்துள்ளது என எப்போது அறிக்கை விடப் போகிறது? மகிந்த இராசபக்சேயை அய்யன்னா அவை எப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போகிறது?

Wednesday, August 09, 2006

பிடல் கஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா?

ஒரு பருந்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு ஒரு கோழிக் குஞ்சு பருந்தின் கண்ணில் விரலைவிட்டு ஆட்ட முடியுமா? முடியும் என்கிறார் கியூபாவின் ஆட்சித் தலைவராக நேற்றுவரை இருந்த பிடல் காஸ்ட்ரோ!

கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்க ஆட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வரும் பிடல் காஸ்ட்ரோ முதல் முறையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார்.

சிறு குடலில் குருதிப் பெருக்கினால் துன்பப்பட்ட காஸ்ட்ரோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை வைத்தியம் செய்யப்பட்டது. அவர் தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரச அடிப்படையில் அறிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை.

மருத்துவமனைக்குப் போகுமுன்னர் தனது ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது இளவல் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைந்திருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர்தான் உலகின் நீண்டகால அரசுத் தலைவர் என்ற பெயரை எடுத்தவர். 1959 ஆம் ஆண்டு சனவரி 1 நாள் கியூபாவில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் அவர் கையில்தான் இருந்து வந்தது.

சிஅய்ஏ உளவு நிறுவனம் மேற்கொண்ட கொலை முயற்சியில் இருந்து தப்பி இருக்கும் ஒரே ஆட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒருவர்தான். 638 க்கும் மேலான தடவை சிஅய்ஏ அவரைக் கொலை செய்த முயற்சி செய்தது. ஆனால் வெற்றிபெற முடியவில்லை.

இன்று உலகில் எஞ்சியுள்ள பொதுவுடமை நாடுகளில் கியூபாவும் ஒன்று. ஏனையவை வடகொரியாவும் சீனக் குடியரசும் ஆகும். சீனாவைப் பொறுத்தளவில் அரசியல் மட்டத்தில்தான் அது ஒரு பொதுவுடமை நாடு. பொருளாதார மட்டத்தில் அதுவொரு பச்சை முதலாளித்துவ நாடாகும்.
கியூபா எப்படிப்பட்ட நாடு? அல்லது தீவு?

அழகான பொருள்கள் எல்லாம் கண்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பாடும் குயில்கள், ஓடும் ஆறுகள், பேசும் கிளிகள், கொட்டும் அருவிகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், தலை சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள், இதமாக வீசும் தென்றல் போன்றவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருக்கின்றன.

மகாகவி பாரதியார் தாம் பாடிய குயில் பாட்டில் மங்கை ஒருத்தியின் மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும் தேனில் இனியாள் திருத்த நிலையினையும் மற்றவர்க்கு சொல்ல வசமாமோ? எனக் கேட்டு விட்டு கற்றவர்க்குச் சொல்கிறார்-

கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே,
பண்கூத் தெனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி
அதனோடே இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்……………………………

பாரதியார் கியூபா தீவைப் பார்தததில்லை. அந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் நல்லதோர் கவிதை ஒன்றைக் கட்டி இருப்பார். கியூபா தீவு அவ்வளவு கொள்ளை அழகு. அதன் இதமான காலநிலை, சுற்றிலும் நீலக்கடல், பால்போல் விரிந்து கிடக்கும் கடற்கரை, சல சல என ஓடும் ஆறுகள் ஆகியவை அந்தத் தீவை பூலோக சொர்க்கமாக மாற்றிக் காட்டுகிறது. நான் நேரில் பார்த்த உண்மை இது.

கியூபாவின் வரலாறு பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம்.

1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கியூபாவைக் கண்டு பிடித்து அது இசுப்பானிய அரசருக்கு சொந்தமானது என்று உரிமை கோரினார். அதன் பின் 400 ஆண்டுகள் இசுப்பானியா கியூபாவை ஆட்சி செய்தது.

1868 -1878 – கியூபன் புரட்சிப் படை இசுப்பானிய ஆட்சியை எதிர்த்து 10 ஆண்டுகள் போரிட்டது. இசுப்பானிய அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஒத்துக் கொண்டது.

1895 - கியூபன்ஸ் மறுபடியும் இசுப்பானியாவுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போரை தொடங்கினார்கள்.1898 - அமெரிக்கா கியூபாவோடு சேர்ந்து கொண்டு இசுப்பானியாவை தோற்கடித்தது. இசுப்பானியா கியூபா மீதான ஆட்சியுரிமைக் கைவிட்டது.1898 – 1902 கியூபாவில் அமெரிக்க இராணுவ ஆட்சி.

1902 - கியூபா குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. Toms Estrada Palma என்பவர் அதன் முதல் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1903 – ஒரு உடன்படிக்கை மூலம் அமெரிக்கா Guantanamo வளைகுடாவை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.

1933 - Fulgencio Batista Zaldivar ("Batista") புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1959 - பிலடல் காஸ்ரோ தலைமையில் புரடசி;ப்படை பஸ்ரியாவை கவிழ்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. 1961 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒரு பொதுவுடமை நாடாகப் பிரகடனப்படுத்தினார். இதே ஆண்டு அமெரிக்க சிஅய்ஏ உளவு நிறுவனம் கியூபா எதிர்ப்பாளர்களது உதவியுடன் கியூபாவைக் கைப்பற்ற முயற்சி எடுத்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது.

1962 - கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. இதன்படி அமெரிக்க குடிமகன் எவரும் கியூபாவோடு வாணிகம் செய்யவும் அந்த நாட்டுக்குப் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதே ஆண்டுதான் கியூபாவிற்கு ஏவுகணைகளைக் கொண்டு சென்ற சோவியத் கப்பல்கள் அமெரிக்காவினால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு அணுவாயுதப் போர் மூளுவது தவிர்க்கப்பட்டது.

1976 - கியூபா புதிய அரசியல் யாப்பை எழுதிக் கொண்டது. அதன்படி கியூபா கம்யூனிஸ்ட் கட்சியே நாட்டின் முதன்மையான அதிகார மையம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1980 - கியூபாவை விட்டு 125,000 கியூபன்ஸ் அமெரிக்காவிற்கு படகுகளில் ஏறித் தப்பி ஓட்டம்.

1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. கியூபாவுக்குக் கிடைத்து வந்த பொருளாதார உதவி நிறுத்தப்படுகிறது. பொருளாதாரம் சீர்குலைந்தது.

1993 - கியூபா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. அதன்படி தனியாட்கள் வாணிகம் நடத்த அனுமதிக்கப் பட்டார்கள்.

1994 - மீண்டும் கியூபன்ஸ் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் 20,000 கியூபன்சை அமெரிக்க நாட்டுக்குள் அனுமதிக்கும் உடன்பாடு ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுதப்பட்டது.

1998 - போப்பாண்டவர் இரண்டாவது சின்னப்பர் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டார். அறுபதுகளில் மத சுதந்திரம் கியூபாவில் தடை செய்யப்பட்டது.

இன்றைய கியூபா பற்றி சில தரவுகளைப் பார்ப்போம்.மக்கள் தொகை – 113,46,670 (2005 ஆம் ஆண்டு மதிப்பீடு) (இலங்கை 190 இலட்சம்)

இனங்கள் - கலப்பினம் - 51 விழுக்காடு (Mulatto 51%)
- வெள்ளையர் - 37 விழுக்காடு
- கருப்பர் - 11 விழுக்காடு
- சீனர் - 1 விழுக்காடு

நிலப்பரப்பு - 110,922 சதுர கிமீ ( 43,000 சதுர கல் ) இலங்கை 65,610 சதுர கிமீ (25,332 சதுர கல்)

அரச மொழி - இசுப்பானீயா

படித்தவர்கள் - 98 விழுக்காடு

மருத்துவர்கள் - 65,000 (200 பேருக்கு ஒரு மருத்துவர்)

தலைநகரம் - ஹவானா

சமயம் - கத்தோலிக்கம் (85 விழுக்காடு)

தேசிய வருமானம் தலைக்கு - 1260 அ. டொலர்கள் (இலங்கை 750 அ.டொலர்கள்)

சராசரி அகவை - 76.21 ஆண்டு

கியூபா மக்கள் தொகையில் 10 இல் ஏழு பேர் 1959 புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள். ஒரு துன்பியல் செய்தி. கியூபா தீவின் பூர்வீக குடிகள் இன்று இல்லை. அந்தத் தீவைக் கண்டு பிடித்த இசுப்பானியர் ஒருவர் மிஞ்சாமல் அவர்களைக் கொன்று ஒழித்து விட்டார்கள்! அந்தத் துன்பியலை இன்னொரு தருணத்தில் சொல்லுவேன்.

காஸ்ரோவின் ஊழி முடிவுக்கு வந்துவிட்டதா? ஆம் என்பதே இதற்குப் பதில் ஆகும். எண்பது வயதை எட்டிவிட்ட காஸ்ட்ரோவின் உடல் நலம் பழைய நிலைக்குத் திரும்பினாலும் ஆட்சி மீது அவர் வைத்திருந்த பிடி திரும்ப வாய்ப்பில்லை.

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியுள்ள நாடுகளில் அதன் தலைவர் மறைய நேர்ந்தால் பாரிய அரசியல் - பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும்.

சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். தனது அரசியல் எதிரிகளை கேட்டுக் கேள்வியின்றி தீர்த்துக் கட்டியவர் என்ற குற்றச் சாட்டுக்கள் அவர் மீது வீசப்பட்டன.

மாசே துங்கின் கதையும் அதுதான். அவரது மறைவுக்குப் பின்னர் சீனாவின் பொருளாதாரக் கொள்கை தலை கீழ் மாற்றம் கண்டது. அவரால் ஓதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் மாசே துங்கின் ஆதரவாளர்களை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இதே போல் யூகோசிலாவிய சோசலீச குடியரசின் ஆட்சித் தலைவர் ரிட்ரோ மறைந்த பின்னர் அந்த நாடு சிதறத் தொடங்கியது.

கியூபாவில் தனிக்கட்சி ஆட்சி நடைபெறுவதால் அங்கு அரை நூற்றாண்டு காலமாக மக்களின் உண்மையான நாடித் துடிப்பைக் கணிக்கும் வாய்ப்பில்லாது போய்விட்டது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இல்லை.

சுதந்திரமான ஊடகங்கள் இல்லை. மனிதவுரிமை பேணப்படுவதில்லை. காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சிக்கு வெளிப்படையான எதிர்ப்பு இல்லை. உள்ளுர இருக்கலாம். ஆனால் முறையான தேர்தலைக் கண்டிராத நாட்டில் எதிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினம்.
காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சியை விரும்பாதவர்கள் அந்த நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். அவர்கள் எல்லோரும் இப்போது புளரிடா, மியாமி, நியூ யோர்க், இலினோய் மற்றும் கலிபோர்னியா போன்ற நகரங்களில் வாழ்கிறார்கள்.

கியூபாவில் இருந்து ஓடி வருபவர்களுக்கு அமெரிக்கா அண்மைக் காலம் வரை மறு கேள்வி கேட்காது குடியுரிமை வழங்கி வந்தது.

அமெரிக்காவில் இப்போது பத்து இலக்கம் கியூபன்ஸ் வாழ்கிறார்கள். இதனால் புளரிடா மாநிலத்தில் உள்ள பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை கியூபானியர் தீர்மானிக்கிறார்கள்!

மிக அண்மையில் (2005) Forbes என்ற அமெரிக்க சஞ்சிகை காஸ்ட்ரோ உலகளாவிய கோடீசுவரர்களது பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. அவரது சொத்தின் பெறுமதி 900 மில்லியன் அமெரிக்க டொலர் என அது மதிப்பிட்டது. அதாவது 11 ஆவது இடத்தில் வைக்கப்பட்ட பிரித்தானியா அரசி இரண்டாவது எலிசபெத்தின் சொத்தின் பெறுமதியை விட இரண்டு மடங்கு. இந்தச் செய்தியில் உண்மை இல்லை.
பிடல் காஸ்ட்ரோ மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார். சாதாரண இராணுவ உடையை அணிகிறார். அவரது பெரிய ‘கட் அவுட்’ டுகளை அல்லது சிலைகளை கியூபாவில் எங்குமே பார்க்க முடியாது. சுற்றுலா அங்காடிகளில் சிறிய புகைப் படங்கள் மட்டும் விற்கப்படுகின்றன.

ஒரே ஒரு தலைவரது பெரிய படங்கள் சிலைகள் மட்டும் முக்கிய சதுக்கங்களில் காணப்படுகின்றன. அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். கியூபா புரட்சியின் போது காஸ்ட்ரோவின் வலது கையாக விளங்கியவர். புரட்சிக்குப் பின்னர் பதவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பொல்வியா சென்று அங்கு ஆட்சியைக் கவிழ்க்கப் போராடி இறந்த சே குவாரா. இதனால் காஸ்ரோவை விட சே குவாராவே புரட்சியாளர்களது மானசீக குருவாக விளங்குகிறார்.

புரட்சிக்குப் பிந்திய கியூபாவின் பொருளாதாரம் நொடிந்து போய் உள்ளது. மக்களின் உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவு நிறைவு செய்யப்பட்டாலும் கியூபா ஒரு ஏழை நாடாகவே இருக்கிறது. நேரில் கியூபாவைப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

நாற்பத்து எட்டு ஆண்டுகள் கழிந்தும் கியூபா நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறுதான்.

கியூபாவில் தனி மனித மாத வருமானம் 40 பேசோ தொடக்கம் 400 பேசோ வரை இருக்கிறது. 27 பேசோ ஒரு அமெரிக்க டொலர் என்ற விழுக்காட்டில் 400 பேசோ வருமானம் 15 அமெரிக்க டொலரைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு மருத்துவரது சம்பளமும் இதுதான்.

கியூபாவுக்கு சுற்றுலா போகிறவர்கள் ஒரு ஹோட்டல் ஊழியருக்கு ஒரு அமெரிக்க டொலரை அன்பளிப்பாகக் கொடுத்தால் அது அவரது 4 நாள் சம்பளத்துக்கு சமமாக இருக்கும்.சுற்றுலாத்துறைக்குப் பெயர் போன கியூபாவில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு மருத்துவர் உழைப்பதை விடக் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசிகளே இப்படியான வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கியூபாவின் பொருளாதரத்தைப் பாதித்துள்ளது என்பது உண்மைதான். இந்தத் தடையால் அந்நிய முதலீடு வரண்டு போனது. அதனல் தொழில்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மைத் துறையில் கூட கியூபா பாரிய முன்னேற்றத்தை எட்டவில்லை.ஒரு சோசலீச நாட்டில் எல்லோரும் சமம் எல்லோரும் ஓரு நிறை என்பது வறுமையைப் பங்கிட உதவுகிறதே ஒழிய செல்வத்தைப் பங்கிட உதவுவதில்லை.

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் பொருள் உற்பத்தையைப் பெருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பெரிய அப்பத்தை மக்களுக்குப் பங்கிடலாம். ஆனால் இது சோசலீச பொருளாதாரத்தில் நடைபெறுவது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கம் எவரும் எதற்கும் பொறுப்பில்லை என்றாகி விடுகிறது.

ஒருவன் கூட்டுப் பண்ணையில் காட்டுகிற அக்கறைக்கும் தன் சொந்தக் காணியை உழுது விதைத்து அதன் பலன் முழுவதையும் தனக்கே வைத்துக் கொள்ளக் காட்டுகிற முயற்சிக்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது. இது மனித சுபாவம். அதனை அரசியல் - பொருளாதாரத் தத்துவங்கள் மாற்ற முடியாது.

காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின்னர் கியூபாவில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படாவிட்டாலும் பொருளாதார மாற்றங்கள் இடம்பெறும் என நிச்சயம் சொல்லலாம்.

ராவுல் காஸ்ட்ரோ தாராள பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை உடையவர் எனச் சொல்லப்படுகிறது. எனவே காஸ்ட்ரோவிற்குப் பிறகு இடம்பெறப் போகும் மாற்றங்கள் இடம் பெறலாம். ராவுல் காஸ்ரோ மறைந்த பின்னர்தான் அரசியல் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கியூபாவில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை.
உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!

திருமகள்

தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம்;

கிடதகதை, தத் தாம் தை,

தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,

ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்

தாம், , தை, தத்த தாம், ,

திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக

திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்

என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?

நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!

தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை நிறைத்து விட்டார்கள்.

வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர் நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.

வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும்
மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்
கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….

என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.

நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?

இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!

நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. இது ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,

அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (foot-steps) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.

அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் warm-up என்று திரு. சதர்சன் மொழிபெயர்த்துச் சொன்னார். அலாரிப்பு ஜதியினை சொற்கட்டு என்று சொல்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.

மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருததல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)

பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது.

பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள்.
அண்மைக் காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.

இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்றும் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார்.

இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!

தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 இராகங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.

ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன்
ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னும் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன் தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல் நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான் மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.

இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.
தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோக நிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர். சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.

இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது.

திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றினார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா. மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.

எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.

சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?

எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம். அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருப்பார்கள் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.
அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது. தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே? உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!
திருமகள்
தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம,; கிடதகதை, தத் தாம் தை,
தாகத ஜம்தரி தா, ததகத ஜம்தரி தை,
ததிகின தோம்-தக ததிகின தோம்-தக திகுததி கிணதோம்
தாம், , தை, தத்த தாம், ,
திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக திகிதக
திகிதக திகிதக திகிதக திகிதக தளாங்கு தகதிது தோம்
என்ன பார்க்கிறீர்கள்? திருமகள் சில காலம் கழித்து அரங்கேற்றம் பார்த்தது போல் தெரிகிறதா?
நீங்கள் நினைப்பது சரி. கிழமை இறுதியில் செல்வி யாழினியின் அரங்கேற்றம் பார்த்தேன். சுவைத்தேன், களித்தேன், மலைத்தேன், திளைத்தேன் அதுபற்றி எழுதலாம் என நினைத்தேன்! மேலே தந்திருப்து யாழினி ஆடிய அலாரிப்பு சொற்கட்டு!
தமிழ் உணர்வாளர் திரு. இராசகுலசிங்கம் (பாபு) அவர்களின் திருமகள் யாழினியின் அரங்கேற்றம் தங்களுடைய வீட்டு அரங்கேற்றம் என நினைத்து நிகழ்ச்சி தொடங்கு முன்னரே 1,700 பேர் கொள்ளக் கூடிய கலைக்கான ரொறன்ரோ மைய அரங்கத்தை (வுழசழவெழ ஊநவெசந கழச யுசவள ) நிறைத்து விட்டார்கள்.
வழக்கமான பூசை, மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கம் நடந்து முடிந்த பின்னர்நட்டுவனார் (நடன ஆசிரியை) தனது மாணவிக்கு இரு கால்களுக்கும் சலங்கை கட்டி விட்டார். இதனை சலங்கை பூசை என்று அழைப்பர். பூசை என்ற தனித்தமிழ் சொல்லை சமற்கிருத சொல் எனக் காட்டுமாறு அதனை பூஜை என வடமொழிப் பற்றாளர்கள் உச்சரிக்கிறார்கள்.
வெண்கலம் செம்ப மற்ற வெள்ளியும் மூன்றிலொன்றால்பங்கிய நஷ்ற்சுரங்கள் பலுகவே யழகாய்ச் செய்தகிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வமாங்கருங்கயி றதனிற் கோத்திட உறுதியாய் முடிச்சைப் போடே…….
என்று மகபரத சூடாமணி என்கிற நூலில் கிண்கிணி என்கின்ற சலங்கையின் அழகுகள் சொல்லப்பட்டுள்ளது. வெண்கலம், செம்பு, வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றால் கிண்கிணி செய்யப்பட்டிருக்கும். வலது காலுக்கு நூறுசலங்கையும் இடது காலுக்கு இருநாறு சலங்கையும் கட்டி ஆடுதல் வேண்டும். ஆனால் நாகரிகம் மிகுந்து நேரம் அருமையாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டில் சொன்னது போல் யாரும் கிண்கிணி கட்டி ஆடுவதில்லை.
நிகழ்ச்சிகளை சுதர்சன் துரையப்பா தொகுத்து வழங்கினார். சுதர்சன் அரங்கேறிய நர்த்தகர். அதனால் நடனம் பற்றிய தரவுகளை சாங்கோ பாங்கமாக அவ்வப்போது எடுத்து விளக்கினார். ஆனால் அதனை பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொன்னதுதான் சோகம். நடனம் எங்கள் மண்ணில் விளைந்த ஒரு கலை என்பது உண்மையானால் அந்த மண்ணிற்குச் சொந்தமான தமிழில்தானே அதனை விளக்க வேண்டும்?
இப்போதெல்லாம் நட்டுவனார்கள் நடனத்தையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். காரணம் நடனம் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது!
நிகழ்ச்சி தோடய மங்களத்தோடு தொடங்கியது. ஆடல்மகள் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முன்னாள் பாடகரும் பக்கவாத்தியக்காரர்களும் சரியாகச் சேர்ந்து இசைவதற்கும் மங்களத்திற்காகவும் பாடுவதாகும், இதனை மேளம் கட்டுவது என்றும் சொல்வர். இந்த நிகழ்ச்சியை நட்டுவனார் ஒரு மணி நேரம் செய்வார். ஆனால் அது இப்போது அய்ந்து மணித்துளியோடு முடிந்து விடுகிறது,
அடுத்து மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) தொடங்கியது. கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடைவுகளை (கழழவ ளவநிள) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து செய்கும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.
அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பதே பொருள். அதனை ஆங்கிலத்தில் றயசஅiபெ-ரி என்று திரு. சதர்சன் மொழிபெயர்;துச் சொன்னார். அலாரிப்பு ஜதியிiனை சொற்கட்டு என்று சொல்வார்கள்.
இந்த இடத்தில் ஒரு ஆடல் மகளுக்கு இருக்க வேண்டிய அழகுகளைச் சற்றுப் பார்க்கலாம்.
மன்னர் முதல் மூன்று குலத்தில் உதித்த சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகத்தை உடையவளாகவும் அன்னம் போன்றவளாகவும் அரச கட்டிலின் முன்னே பத்து முழம் விட்டு கீழ்த்திசையில், திரையை நீக்கி, முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்கத் தோன்றுவாள். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் தாள சுரஅறிவு, பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முக மலர்ச்சி இவற்றை உடையவளாய் இருந்தல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)
பண்டைய காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் 64 கலைகளில் ஒன்றான ஆடல்கலையே இன்று பரதம் என அழைக்கப்படுகிறது. பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் இதனை கூத்து, ஆடல், நடம், நர்த்தனம், நிருத்தம் என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள். அண்மைக்காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.
இந்த நடனத்தை சிவபெருமான் பிரமனுக்கு கற்பித்தார் என்றும், பிரமன் பரதமாமுனிவருக்கு (தண்டு முனிவர்) கற்பித்தார் என்றும், பரதர் அதனை கந்தருவர் அப்சரஸ் முதலிய விண்ணுலக வாசிகளுக்கு கற்பித்தார் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கே உரித்தான தாண்டவ நடனத்தை சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திகேசுவரருக்குக் கற்பித்தார். இவை யாவும் பின்னால் நடனக் கலைக்கு ஒரு தெய்வீகத்தைக் (ஆகமத்தை அருளியவர் சிவபெருமான் என்பது போல) கற்பிக்க நினைத்தவர்களது கற்பனையாகும். பரதக் கலை யாருக்குச் சொந்தம், தமிழருக்கா வடமொழியாளருக்கா? என்ற சிக்கலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதற்குத் தோதான இடமும் இது இல்லை. ஆனால் ஆடல்மகளிரது உடையை வைத்தே இது யாருடைய கலை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்!
தமிழ்நாட்டில் பரதம் தஞ்சை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வளர்ந்து பரவியது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை தேவடியார் (தேவதாசிகள்) எனப்படும் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள். இராசராசன் காலத்தில் ஏராளமான பெண்கள் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இவர்கள் ஆடல், பாடல், இசைக்கருவிகள் முதலியவற்றை முறைப்படி கற்றுத் தேறியவர்கள். குமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் இருந்த உருத்திரக்கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவைநாயகியை கண்டு காதலித்து மணந்தார் எனத் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) கூறுகிறது.
பரத நாட்டியத்தில் மட்டுமே கர்நாடக இசையில் உள்ள 35 தாளங்களும் 108 வகையான தாளங்களும் நாட்டிய உருப்படிகளும் உள்ளன.
ஆடல்மகளிருக்கு இயற் தமிழிலும், இசைத் தமிழிலும் ஓரளவு அறிவு இருத்தல் வேண்டும். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் மெய்ப்பாடுகளை சரிவர வெளிக்காட்ட முடியாது.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் ஆடலும் பாடலும் அழகும் இம்மூன்றின் ஒன்று குறைபடாமல் ஏழ் ஆண்டு இயற்றி, பன்னிரண்டாம் அகவையில் மன்னன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். அப்போது மேடையில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இருவகைக் கூத்தின் (அகக் கூத்து, புறக் கூத்து) இலக்கணம் அறிந்த ஆடல் ஆசான்.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை, ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் பாடக்கூடிய இசை ஆசிரியன்.

இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல் பொது இயல் என்று இரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, இசைப் புலவன்.

ஆளத்தி வைத்த பண்ணின் தன்மையை முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையைறையும் நீர்மையும் என்னம் பதினோரு கூறுகளையும் அறிந்து, இசையோன்.

தாள நிலையில் எய்த வைத்து ஓசை தன் கவியிடத்தே வைக்க வல்லவனாய், பகைவராலும் செய்யப்பட்ட வசை மொழிகளை அறிந்து, அவை பயிலாத தூய, இனிய சொற்களால் கவி இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்கவனாகிய இயற் தமிழ்ப் புலவன்.

இசைக் கருவிகளில் வல்லவனான தண்ணுமை முதல்வன்.

இசையோன் பாடிய நிலையை உணர்ந்து பண்ணிலக்கணம் பதினொன்றையும் பொருந்த வைத்து, முதல,; நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு நலித்தும் கேடில்லாமல் இளைத்து வளர்ந்து, பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய் பிறருக்குப் புலப்படும் படி எழுத்தெழுத்தாக இயக்கி, குறைவுபடாமல் இசைக்கும் குழலோன்.

இந்த அரங்கில்தான்; மாதவிப் பொன்மயிலாள் அரங்கேறினாள்.
இளங்கோ சொன்ன இயற் தமிழ்ப் புலவன் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம் கனடாவில் வந்து விட்டது.

தமிழ்த் தெரியாத பிள்ளைக்கு ஆடல் சொல்லிக் கொடுக்க முடியாது, முதலில் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள் அதன்பின் ஆடல் பழகலாம் என்று சொல்லக் கூடிய நட்டுவனார்கள் இன்று இருக்கிறார்களா? இசை ஆசிரியர் இரண்டொருவர் இருக்கிறார்கள்.

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டது. ஆனால் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

யாழினி ஆடிக்காட்டிய நடனங்களில் மெய்ப்பாடு (நவரசம்) மிகவும் நேர்ந்தியாக இருந்தது. அதனை ஏன் தமிழில் பாடவில்லை என்பது தெரியவில்லை.

உடலின் அசைவுகளால் நடனத்தில் அடைவுகள் தோன்றுகின்றது. அதே போல் முகத்தின் சதைகளின் அசைவினால் வேறுபாடான முகபாவங்கள் தோன்றுகின்றன. இந்த முகபாவங்களில் கண்களின் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகையான முகபாவங்களை தொல்காப்பியர் எண்பாண் சுவை என்பார். எட்டு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற இந்த மெய்ப்பாடுகள் ஆவன,

நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இவற்றோடு யோகநிலையையும் சேர்த்து வடநூலோர் நவரசம் என வழங்குவர்.

சிரித்த முகபாவம், கர்வமான பார்வை, கூரான பார்வை, இடது அல்லது வலது அரங்கத்தைப் பார்த்தல் ஆகியவை முக்கியமாகும்.
இந்த மெய்யின் புறப்பாடுகளை முகத்தில் கொண்டுவர தமிழிமொழி அறிவு கட்டாயமாகும். அவற்றை ஆங்கிலத்தில் படித்து விளங்கிக் கொண்டு முகபாவம் காட்டுவது பிடரியைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது. திரு. இராசகுலசிங்கம் வரவேற்புரை ஆற்றி;னார். கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்றி பல நாள் மேடையில் பேசிப் பழகிய அரசியல்வாதி போல் பேசினார். தனது அம்மம்மாவை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதுபோல் தான் படித்த இந்துக் கல்லூரி, தன்னை ஆளாக்கிய ஆசிரியர்கள், கைப்பிடித்த துணைவி மணிமேகலை ஊக்குவித்த உடன்பிறப்புக்கள் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரங்கில் ஆடல் அழகிக்கு அடுத்ததாக அவையோர் மனங்களைக் கொள்ளை கொண்டவர் பெங்களுர் மிருதங்க ஆசான் எஸ்.வி. பாலகிருஷ்ணா.

மிருதங்கத்துக்குள் இத்தனை இசைநுணுக்கங்கள் இருக்கின்ற சங்கதி அன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாதவியின் அரங்கேற்றத்தில் தோற்கருவியை வாசித்த தண்ணுமை முதல்வனை மனக் கண்ணில் கொண்டு வந்தது போல மிக நேர்த்தியாக வாசித்தார்.

அடுத்து வயலின் வாசித்த திருமதி கல்யாணி சுதர்சன் மனதைத் தொட்டார். அவரது வாசிப்பில் பட்டறிவின் முத்திரையைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

யாழினியின் அணிமணி அலங்காரம் (நாடக ஆபரணம், நிருத்ய ஆபரணம்) ஒப்பனை அலங்காரம், தலை அலங்காரம், உடை அலங்காரம் மிக மிக நேர்த்தியாக இருந்தன. நட்டுவனார் இந்தத் துறையில் மிக்க கவனம் செலுத்தியது தெரிந்தது.

பரதமும் இசையும் ஒன்றிணைந்த கலைப் பரம்பரையில் வந்த கலைமாமணி யாதவன் வழக்கம் போல் நன்றாகவே பாடினார். குறிப்பாக பின்னணி இசை இல்லாது பாடும்போது பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தது. ஆனால் முதல் நாள் இரவு நெடு நேரம் கண் விழித்து ஒத்திகை பார்த்ததோ எஎன்னவோ தூக்கக் கலக்கத்தில் இருந்தவர் போல் காணப்பட்டார்.
எல்லோருக்கும் மேலாக நடன அரங்கேற்றின் பாராட்டுக்குரியவர் நட்டுவனார் நிரஞ்சனா சந்துரு ஆவார். அரங்கில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு காணப்பட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.
சிறப்பு விருந்தினரது பெயரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பலரும் சரியாக உச்சரிக்க முடியாது வில்லங்கப்பட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதியவாறே திருமாவலவன் என உச்சரித்தார்கள். இது சின்னத் தவறுதான் என்றாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

முதன்மை விருந்தினர் இசை ஆசான் பொன். சுந்தரலிங்கம் பேசும் போது யாழியின் ஆடல் தமிழீழத்திலும் அரங்கேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் மேடையில் வைத்தே யாழினி வழக்கறிஞருக்கு படிக்க இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்பட்டதே?
எப்போதும் தமிழில் பேசிவிட்டு ஆங்கிலத்திலும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அடிகளார் யோசேப் சந்திரகாந்தன் இரு மொழிகளிலும் வாழ்த்துரை வழங்கினார். வழக்கம் போல் கூற வேண்டியதை இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். வந்திருந்தவர்கள் தமிழர், கேட்போர் தமிழர் பின் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்? தமிழ் தெரியாத தமிழர்களுக்கு ஆங்கிலம் என்றால் அவர்கள் தமிழ் படிக்காமல் இருந்துவிட அது நல்ல வாய்ப்பாகிவிடாதா?

சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் முதலில் கலை பற்றிப் பேசினார். தான் கலந்து கொள்ளும் முதல் நடன அரங்கேற்றம் யாழினியுடைய அரங்கேற்றம் என்று சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது. கனடாவில் அவர் சில காலம் இருக்க நேர்ந்தால் ஒவ்வொரு கிழமையும் நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கலாம்.

அரசியல் பேசும்போது தேர்தல் கூட்டணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் செய்யப்படுவது, விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவோடு அணி சேர்ந்தாலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது, தமிழீழ விடுதலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றுமே பக்க பலமாக இருக்கும் என்றார்.

தமிழீழ அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கேற்றத்துக்கென்றே எழுதிய “உலகமே தீர்ப்பு எழுது” என்ற பாடலுக்கு கலைமாமணி யாதவன் இசை அமைத்துப் பாட யாழினி ஆடினது சிறப்பாக இருந்தது.

அரைத்த மாவையே அரையாமல் காலத்துக்கு ஏற்றவாறு “நாம் அழுத கண்ணீர்” என்ற எழுச்சிப் பாடலுக்கு யாழினி ஆடியது பொருத்தமாக இருந்தது.

நன்றியுரையை அன்றைய ஆடல்நாயகி யாழினியே செய்தார். அவரது வாயில் இருந்து ஒரு தமிழ்ச் சொல்லேனும் வராதது மனதுக்கு வலியாக இருந்தது.

அம்மா அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்கள் கூட அவர் வாயில் வர மாட்டேன் என்று விட்டது.

தமிழில் வணக்கம் நன்றி என்ற இரண்டு சொற்களையேனும் அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா? இந்தச் சொற்கள் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கே கைவந்த கலைச் சொற்களாச்சே?

கலைக்கான ரொறன்ரோ மையம் (Toronto Centre for Performance Arts) வழங்கிய ஒலி ஒளி மெச்சத்தக்கதாக இருந்தது.

Tuesday, August 01, 2006

சிறுதாவூரை வளைத்து உலையில் போட்ட ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா

சிறுதாவூர் சிறிய ஊராக இருக்கலாம். ஆனால் அது தமிழக அரசியலில் “பெரிதாவூர்” ஆகப் பேசப்படுகிறது. சிறுதாவூர், சென்னை - மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் இருக்கிறது. இங்கே கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒரு பெரிய மாளிகை. இங்கேதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது உயிர்த் தோழி சசிகலா இருவரும் சென்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தல் விவசாயத் தொழிலாளர்களைக் குடி அமர்த்தும் திட்டத்தின் கீழ் 1967 செப்தெம்பர் 15 இல் சிறுதாவ+ரில் ஒரு குடும்பத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், பத்து செண்டு மனையும் வழங்கப்பட்டது. அதே செப்தெம்பர் 30 ஆம் நாள் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பயனாளிகளைத் தேர்வு செய்தது. அவர்களுள் தலித் அல்லாத ஏழைகளும் இடம் பெற்றிருந்தனர். இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களைப் பெற்ற குடியிருப்பாளர்கள் பலர் பிறருக்கு விற்று விட்டனர் எனக் கூறப்படுகிறது. அதன் பின் அந்த நிலம் பலருக்கு கைமாறியது. சுபஸ்ரீ, ஜாகிர் குசேன், காஜா மொகிதீன், சேயத் அப்பாஸ, இளையராசா எனக் கைமாறி இறுதியில் பரணி Cottage Resorts உரிமையாளர்கள் அதனை விலைக்கு வாங்கினார்கள். சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி, சித்திரா. சுதாகரன் ஆகியோரே இந்த பரணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தலித்மக்கள் தங்கள் நிலம் பிறரால் பிடுங்கப்பட்டு விட்டதாகவும் அந்த நிலம் சசிகலாவுக்குச் சொந்தம் எனச் சொல்லி தாங்கள் பயமுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு செய்தனர். நிலத்தைச் சுற்றிப் பேடப்பட்ட கம்பி வேலிகளையும் தூண்களையும் தலித் மக்களில் சிலர் அகற்றிவிட்டனர். தலித்மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கட்சி சென்னையில் பேரணி ஒன்றை நடத்தி முதல்வர் கருணாநிதியிடம் தலித்துக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சித் தலைவர் என். வரதராசன் தமிழக முதலுவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை சசிகலாவின் நெருங்கி உறவினர்கள் ஆன இளவரசி, சித்திரா, சுதாகரன் ஆகியோர் மோசடி செய்து வாங்கி இருப்பதற்கான ஆவணங்களைக் கையளித்தார். தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நில அளவை எண்கள் ( Land survey numbedrs) சசிகலாவின நெருங்கிய உறவினர்கள் வாங்கிய நிலத்தின அளவை எண்களோடு ஒத்துப் போவதாக திரு. வரதராசன் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக நில அளவு எண் 378/2 தொடக்கத்தில் எழுமலை என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அதே நிலம் பரணி ஊழவவயபந சுநளழசவள க்கு மாற்றப்பட்டது. .இதே போல் சின்னப்பன் என்பவரது நில அளவு எண் 374/2 அதே நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு மற்றவர்களது நிலங்களும் அவர்களது இசைவு இன்றி பரணி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி சட்டத்துக்கு முரணான நில மாற்றங்களை செய்ய மறுத்த தாசில்தார்கள் பணி மாற்றம் செய்யப்படடு அவர்களது இடத்துக்கு முதல்வரோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் அமர்த்தப்பட்டார்கள். எடுத்துக் காட்டாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தியாகராசன் 11 நாள்களுக்கு மட்டும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு நிலம் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்தச் சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஒய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை நியமித்துள்ளார். அறிக்கை கொடுக்க ஒரு மாத கால கெடு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுதாவூர் நிலச் சிக்கலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும் கையில்; எடுத்து பறிபோன தலித் மக்களின் நிலத்தை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா, பஞ்சமி நிலத்தில்தான் வளைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் வீசப்படுவதைப் பயன்படுத்தி அரசியலில் கொஞ்சக் காலம் காணாமல் போயிருந்த மருத்துவர் கிருஷ்ணசாமி வெளிச்சத்துக்கு மீண்டும் வர இதுதான் சாட்டு என்று சிறுதாவூருக்குள் நுழைந்துள்ளார்.

கடந்த யூலை 18 ஆம் நாளன்று சிறுதாவ+ருக்கு தீடீரென அதிரடியாகச் சென்ற கிருஷ்ணசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஜெயலலிதாவின் பங்களாவையொட்டி இருந்த இடத்தில் நுழைந்த கிருஷ்ணசாமி பங்களாவை நெருங்கிப் போய்ப் பார்த்தார். கூடவே சென்ற செய்தியாளர்களும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று இதுவரையில் நெருங்கமுடியாமல் இருந்த சிறுதாவ+ர் பங்களாவை படம் பிடித்துத் தள்ளினர்.

"சசிகலா பெயரைச் சொல்லித்தான் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அந்த நிலத்தைத் திரும்பப் பெறும்வரை ஓய மாட்டோம்” என அங்கிருந்தவர்கள் முழகக்கம் இட்டார்கள். இதைக் கேட்டுவிட்டு ‘நிலத்தை மீட்டெடுப்பதில் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் நீங்கள் உறுதியாக இருப்பீர்களா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி "உயிரே போனாலும் நாங்கள் கடைசி வரையில் போராடுவோம்” என்றதும் மருத்துவர் கிருஷ்ணசாமி நெகிழ்ந்து போனார்.

அதிமுகவினர் “திமுகதான் தலித் அமைப்புக்களை தூண்டி விட்டுப் பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா தலித்துகளுக்கு எதிரானவர் என்ற படிமத்தை உருவாக்கி விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள் ……. அதற்காகத்தான் கிருஷ்ணசாமியைப் பயன்படுத்துகிறார்கள்” என்று பேசுகிறார்கள். தலித் மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறுத்தைகள் அமைப்புப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சிறுதாவூர் சென்று குறிப்பிட்ட தலித் மக்களைச் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் அவர் விட்ட அறிக்கையில் தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் அந்த நிலத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்தச் சிக்கலை வைத்து ஜெயலலிதாவை அரசியல் பழிவாங்க திமுக அரசு முயற்சிப்பதாகவும் திருமாவளவன் குற்றச் சாட்டியுள்ளார். அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிகவும் இந்தச் சிக்கல் தொடர்பாக களம் இறங்கியுள்ளது. சிறுதாவ+ர் நிலம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சியில் அவர் அளித்த செவ்வியில் சிறுதாவ+ரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்கு பயன்படுத்துகின்ற வீடு தலித் மக்களுக்கு 1967 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்று முழுக்க முழுக்க பொய்யான முறைப்பாடு எழுப்பப்பட்டு உள்ளது. இந்தச் சிக்கல் குறித்து உண்மை நிலையை சிறுதாவ+ர் மக்களிடம் நேரில் விசாரித்து அறிய மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஒரு குழுவினர் சிறுதாவ+ர் சென்றனர்.ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகச் சொன்ன செய்திகளில் இருந்தும், திரட்டப்பட்ட வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்குப் பயன்படுத்தும் வீடு, சுற்று அடைப்புக்கு உள்பட்ட இடமும், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிறிது அளவும் அமையவில்லை என்பது தெரிகிறது.இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதி என்பதாலும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாத நிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களை பிறருக்கு விற்று விட்டனர்.பலருக்கு நிலம் கை மாறிய நிலையில் 2005 இல் பரணி ஊழவவயபந சுநளழசவள உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர். ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டவும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லவும் திட்டமிட்டு, ஒரு கோரிக்கையை தரச் செய்து உயர்நீதீமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை ஆணையத்தை முதல்வர் அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்துத் தான் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது இது தொடர்பாகவும் விசாரணை நடத்த கருணாநிதி முன் வருவாரா?” என்றார் வைகோ.வைகோ ஒருவரைப் போற்ற நினைத்தால் அளவுகடந்து போற்றுவார். அவ்வாறே தூற்ற நினைத்தாலும் சூடான சொற்களைத் தேர்ந்தெடுத்து கடுமையாகத் தூற்றுவார். இது அவரது இயல்பு.பொடா சிறையில் இருந்த போதும் அதில் இருந்து வெளிவந்த பின்னரும் வைகோ ஜெயலலிதாவை சரிமாரியாக அருச்சித்தார். சூனியக்காரி, ஊர்ப்பிடாரி, பாசிஸ்ட் என்றெல்லாம் அருச்சனை செய்தார். அதிமுக வோடு கூட்டணி வைத்த பின்னர் அதே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி, யோன் ஒவ் ஆர்க், ஜான்சி இராணி என்றெல்லாம் உச்சிமேல் வைத்துப் போற்றுகிறார். தேர்தலின் போது வைகோ “புரட்சித் தலைவியின் ஆட்சி பொற்கால ஆட்சி” என்று புகழ்மாலை சூட்டிpய போது எல்லோரும் வியப்பால் வாயடைத்துப் போனார்கள்.திமுக சார்பாக 18 ஆண்டு காலம் மேல்சபை உறுப்பினராக இருந்த வைகோவிற்கு “அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது” என்ற உண்மை பொய் எப்படித் தெரியாமல் போனது என்பது விளங்கவில்லை. வேறு கட்சிக்காரன் கேட்கலாம். வைகோ எப்படிக் கேட்கலாம்? சிறுதாவூர் பங்களாவின் சொந்தக்காரர் யார்? அதற்கும் ஜெயலலிதா – சசிகலா இருவருக்கும் என்ன தொடர்ப்பு? என்று முதலவர் கருணாநிதி கேட்டார். “சிறுதாவூர் பங்களா எனக்கோ சசிகலாவுக்கோ சொந்தமில்லை. அதில் வாடகைக்குத்தான் இருக்கிறோம்” என ஜெயலலிதா பதில் இறுத்தார். உண்மை என்னவென்றால் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள்தான் பல கோடி பெறுமதியான அந்த நிலத்துக்கும் பங்களாவிற்கும் சொந்தக்காரர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிறுதாவூர் பங்களா இருந்த இடம் வந்ததும் பேருந்து நடத்தினர் “அம்மா இடம் வந்தாச்ச இறங்குங்கோ” என்று குரல் கொடுப்பாராம். அப்படிக் குரல் கொடுக்க மறந்த அல்லது மறுத்த நடத்துனர்கள் பணி மாற்றப்பட்டார்கள்!ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை – மாமல்லபுரம் நெடுஞ்சாலை பல கோடி செலவழித்து செப்பனிடப்பட்டது. அதற்கு இந்தப் பங்களாதான் காரணியாகும்.இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் ஒரு தலையிடி வந்துள்ளது.

பிறந்த நாளை ஒட்டி இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பரிசுகள் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சி.பிஅய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகையை சி.பி.அய.; தாக்கல் செய்துள்ளது.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 1990 – 96 ஆம் ஆண்டுகளில் முதல்வராக பதவி வகுத்தார். 1992 ஆம் ஆண்டில் அவரது பிறந்த நாளையொட்டி ஏராளமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. வெளிநாட்டில் இருந்து 89 டிடிக்கள் வந்தன. அவற்றின் மதிப்பு ரூ 2 கோடி 12 உரூபா ஆகும். இந்த 89 டி.டி.,க்களும் 57 பெயர்களில் அனுப்பப்பட்டு இருந்தன. இவை சென்னை கனரா வங்கியில் ஜெயலலிதா பெயரில் வரவு வைக்கப்பட்டது. அலுவல் ரீதியான பரிவர்த்தனை செய்துள்ள நபர்களிடம் இருந்து இந்த பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா பெற்றிருப்பதால் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 11ன் கீழ் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்று கருதப்பட்டது.
தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமான வரித் துறையின் இயக்கநர் (புலன் விசாரணை) பெயரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது பின்னர் மாநில அரசின் வேண்டுகோளின்படி இந்த வழக்கு விசாரணை சி.பி.அய்க்கு மாற்றப்பட்டது. சென்னையில் உள்ள சி.பி.அய்யின் ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா விவகாரத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 13(1)(இ) பிரிவின் கீழ் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்து சி.பி.அய்யினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த மூன்று லட்சம் டாலர் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11 இன் படி ஜெயலலிதா குற்றம் புரிந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் சிபிஅய்க்கு அனுமதி அளித்தது.

அன்றைய காலகட்டத்தில் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் டிடி.க்கள் எடுக்க பணம் கொடுப்பதில் பின்னணியில் இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிடிக்களை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வதற்கு இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலிதா மீது வழக்குத் தொடர தமிழக சபாநாயகரின் அனுமதியை சி.பி.அய் கேட்டது. ஜெயலலிதா தற்போது எம்எல.ஏ வாக இருப்பதால் அவர் மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க அவைத்தலைவரின் அனுமதி வெற வேண்டும். ஜெயலலிதா மீது சட்டப்ப+ர்வ நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி சுந்தரத்திடம் ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்தரிரிகையில் 149 சாட்சிகள் இடம் பெற்றுள்ளனர். 285 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,000 பக்கங்கள் அடங்கியதாக குற்றப்பத்திரிகை உள்ளது. குற்றப்பத்திரிகையை சரிபார்த்து விட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உட்பட மூவருக்கும் ஆணை அனுப்பப்பட்டு குற்றப்பத்திரிகையின் படிகள் வழங்கப்படும்.

திராவிடர் இயக்கத்தின் மூலாதாரக் கொள்கைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஜெயலலிதாவை எண்பதுகளில் அரசியலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மறைந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்திற்கு மிகப் பெரிய வரலாற்றுத் தவறைச் செய்தார்.
திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி இயக்கத்துடனோ - அல்லது சுயமரியாதை இயக்கத்துடனோ - அல்லது தமிழ் இயக்கத்துடனோ - ஒட்டோ உறவோ இல்லாத ஜெயலலிதா - திராவிடர் இயக்கம் எந்த மேல் வருணத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டதோ, அந்த வருணத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை எம்.ஜி.ஆருடன் ஏற்படுத்திக் கொண்ட 'நெருக்கத்தை” வைத்தே அதிமுக வின் பொதுச் செயலாளராகி இரண்டு தடவை ஆட்சியும் நடத்திவிட்டார்!

நல்லகாலமாக சென்ற தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டு விட்டது. வி.புலிகளின் கடும் எதிர்ப்பாளரான ஜெயலலிதா தற்செயலாக வென்று வந்திருந்தால் தமிழ்த் தேசியத்துக்கு அது மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும்.

Monday, July 31, 2006

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு

தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

திருமகள்

மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை.

நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை.முன்னர் நான் எழுதிய “அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!” என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வாணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல்லாம் புதின ஏடுகளில் வந்த செய்திகளே. ஏன் அதன் தலைப்புக் கூட செய்தி ஏடுகளில் வந்ததுதான்.

அய்யப்ப பக்தர்களுக்கு இப்போது பொல்லாத காலம். அவர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனை வந்த வண்ணம் உள்ளது. “அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!” என்பதைப் படித்துவிட்டு பதை பதைத்த பக்தர்கள் இப்போது வந்துள்ள செய்தியைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறார்களோ நானொன்றும் அறியேன் பராபரமே!

இன்றைய தமிழக முதல்வர் சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கதை உரையாடல் எழுதி வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாயிலாகக் கோயில் பூசாரிகளை ஒரு பிடி பிடித்தார். அந்த அனல் தெறிக்கும் உரையாடல் அப்போது மிகவும் புகழ் அடைந்தது.

“கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாதது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன் அவன் கடவுள் பக்தன் என்பதற்காக அல்ல. கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு காமுகனாக இருந்தான் என்பதற்காக…..” என்பதுதான் அந்த வசனம்.

பராசக்தி திரைப்படத்துக்கு முன்னர் அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி திரையுலகில் ஒரு திருப்புமுனை ஆக அமைந்தது. நூறு நாளுக்கு மேல் ஓடி சக்கை போட்டது.

அண்ணாவின் உரையாடல் “உறையில் இருந்து எடுத்த வாள் பளிச் பளிச் என்று மின்னுவதாக” மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதியிருந்தார்.“பகலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே இன்பவல்லிகளுடன் சல்லாபம்” என்ற உரையாடல் அதில் வரும். அந்த உரையாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி பேசுவார்.

அரை நூற்றாண்டு சென்ற பின்னரும் நிலைமை மாறவில்லை. சபரிமலை தந்திரி அதாவது சபரிமலை தலைமைப் பூசாரி கண்டாரு மேனகுரு¸ கைதாகிறார்! அய்யப்பன் சாமிக்கும் அய்யப்பன் பக்தர்களுக்கும் இடையில் தரகராக நின்று கொண்டு அய்யப்பனோடு பேசும் பூசாரிதான் கைதாகிறார். இதை நீங்கள் படிக்கும்போது கைதாகி இருப்பார்!

சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமல்தான் பூசை செய்கிறார்கள். ஆசார நியமனம் பார்ப்பதில்லை. மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை. இதனால் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்ற வீசிய குற்றச் சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்படுகிறார் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல காரணம். குளிக்காதது கிரிமினல் குற்றமல்ல!

ஓகோ! எல்லாப் புரோகிதர்களும் செய்வது போல அய்யப்பன் போட்டிருக்கும் பல கோடி பெறுமதியான நகைகளில் சிலவற்றைத் தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்குத் திருடி இருப்பார். அதுதான் காவல்துறை அவரைக் கைது செய்கிறது என்கிறீர்களா?அதுவும் இல்லை.

அப்படி அய்யப்பன் கிலோக் கணக்கில் போட்டிருக்கும் தங்கம், வைரம் வைடூரியம் ஆகியவற்றால் செய்த நகைகளைத் திருடுவது பெரிய குற்றமல்ல! எல்லாப் பூசகர்களும் பூசாரிகளும் அதை அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில சமயம் சாமி சிலைகளையே திருடி விடுகிறார்கள்!

கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களில் அய்யப்பன் கோயில் பூசாரியார் கடைசிப் பாதகமான காமத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்! அய்யப்பனுக்குக் களங்கம் ஏற்படுத்திய தந்திரியை சிறையில் தள்ளுங்கள் என தேவசம் சபை அமைச்சர் ஆவேசமாகப் பேசியுள்ளார். தந்திரியின் வேலையையும் தேவசம் சபை பறித்து விட்டது. வரைவின்மகளிர் வீட்டை காமகோட்டமாக்கி தாகசாந்தி செய்யப்போன சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிதான் வளமாக சில இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டார்.

தந்திரி மாறு வேடத்தில் போகவில்லை. நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கழுத்தில் இரத்தினமாலை, கையில் தங்கக் காப்புக்கள், விரலில் இரத்தின மோதிரங்கள் இடுப்பில் பட்டு வேட்டி இத்தியாதி இலட்சணங்களோடு அம்பாள் தரிசனத்துக்குப் போயிருக்கிறார்!

இவை போதாதா அவரை யார் என்று அடையாளம் காண? அவரது படம்தானே நாளும் பொழுதும் செய்தித்தாள்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தை வைத்துக் கொண்டுதான் இளைஞர்கள் அவரை எளிதாக அடையாளம் கண்டு சுற்றி வளைத்திருக்க்கிறார்கள்.

ஆடையில்லாத அழகிகளோடு பூசாரி கலவிக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் அந்தக் காட்சியை படப்பெட்டிக்குள் பிடித்துக் கொண்டார்கள்!

ஒரு கோடி உரூபா தருவதாக தந்திரி தந்திரமாக பேரம் பேசிப் பார்த்தார். முடியவில்லை.

கழுத்தில் போட்டிருந்த இரத்தினமாலை, கைகளில் கட்டியிருந்த தங்கக் காப்புக்கள், விரலில் போட்டிருந்த இரத்தின மோதிரங்கள் என எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு தந்திரி அங்கிருந்து தப்பியிருக்கிறார். தப்பின தந்திரி சும்மா இருந்திருக்கக் கூடாதா?

கேரளாவின் எர்ணாகுளம் காவல்துறையிடம் அவர் ஒரு முறைப்பாடு கொடுத்தார். “கொச்சியில் பாலாரிவட்டம் பகுதியில் வீடு கட்டும் வேலை நடந்துவருகிறது. அதைப் பார்ப்பதற்காக செங்கன்னூரில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டேன். கல்லூர் அருகே டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்கள் என் காரை ஓவர்டேக் செய்து மறித்து நின்றன. அதில் இருந்து 9 பேர் இறங்கினர். அவர்களது பிளாட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும், 5 நிமிடத்தில் திரும்பி விடலாம் என்றார்கள். ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றனர். நான்காவது மாடிக்குச் சென்றதும் ஒரு அறையில் என்னைத் தள்ளிக் கதவை மூடினர். என் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கட்டிலில் தள்ளினர். பின்னர், கறுத்த நிறத்தில் இருந்த பெண்ணை எனக்கு அருகே தள்ளிவிட்டனர். இரண்டு பேரின் தலைகளைச் சேர்த்து வைத்தும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பது போலவும் போட்டோ எடுத்தனர். அந்த பெண் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தார்.

இரண்டு நிமிடத்திற்குப் பிறகு திரும்ப வந்தார்கள. போட்டோவைக் காட்டி ரூ.30 லட்சம் கேட்டனர். கேட்டதைத் தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர். நான் இங்கிருந்து போனால்தான் பணம் தரமுடியும் என்றேன். பணமோ, செக்கோ உடனே தர வேண்டும் இல்லாவிட்டால் போட்டோவை வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். என்னிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், இரத்தின மாலை, இரத்தின மோதிரங்களைப் பறித்துக்கொண்டு வெளியே விட்டனர்.”தந்திரி கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த காவல்துறை அவர் சொன்னது பஞ்சமா பாதகங்களில் இன்னொரு பாதகமான பொய் என்ற முடிவுக்கு வந்தனர். கண்டரரு மோகனரு கொடுத்த முறைப்பாட்டில் கூறியள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 22 வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பரத்தமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பிட்ட இந்த வீட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல் தந்திரி சென்று இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர் இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே இந்த வீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பதை அந்தப் பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரைப் பிடிக்க திட்டம் போட்ட இளைஞர்கள் கடந்த 23 ஆம் நாள் வழக்கம் போல் அழகிகளின் வீட்டுக்குள் புகுந்த தந்திரியை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அந்த பெண்களுடன் தந்திரி நெருக்கமாக இருப்பதைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தந்திரியை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அடுக்குமாடி வாசலில் வைக்கப்பட்டு இருக்கும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் செல்வதாக தந்திரி எழுதி இருக்கிறார். பரத்தையர்களுக்கு அந்த இடத்தில் பிளாட் வாங்கிக் கொடுத்துவரே தந்திரிதான். பிளாட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும் தந்திரிக்கும் ஏற்கனவே நெருக்கிய தொடர்பு உண்டு.தந்திரி வரும் நாள்களில் வேறு எந்த ஆட்களையும் அந்த அழகிகள் அனுமதிக்க மாட்டார்களாம். மேலும் அவர்களிடம் போகும் போது சபரிமலை அய்யப்பன் பிரசாதத்தையும் தவறாது கொண்டு போய் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தந்திரியின் முறைப்பாட்டை விசாரித்த எர்ணாக்குளம் காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கான ஆதராங்கள் அனைத்தும் தற்போது தங்களிடம் உள்ளதாக காவல்துறை மேலும் சொல்கிறது. விசாரணை பற்றி எர்ணாகுளம் துணை காவல்துறை அதிபர் பத்மகுமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் (யூலை 23) அந்தச் சம்பவம் மாலை 6.30 க்கு நடந்ததாக தந்திரி கூறினார். காவல்துறைக்கு இரவு 12.30 க்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். அதுவும் தனது வழக்கறிஞர் மூலமாகத்தான் முறைப்பாடு கொடுத்தார். அப்போதே அவர் மீது காவல்துறைக்கு அய்யம் எழுந்தது.அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்திரியுடன் காணப்பட்ட பெண் சேர்த்தலையைச் சேர்ந்தவர். விபசார வழக்கில் தேவரை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர். இப்படிப்பட்ட பெண் தனியாக வசிக்கும் குடியிருப்பில் தந்திரிக்கு என்ன வேலை?தந்திரியுடன் இருந்த இளவயது பெண்ணிடமும் வீட்டின் சொந்தக்காரர் எனக் கருதப்படுகின்ற இன்னொரு பெண்ணிடமும் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் ஏ.பி. யோர்ஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினார். முதலில் இளைஞர்களுக்கு உருபா 20 ஆயிரம் கொடுக்க தந்திரி முயற்சி செய்துள்ளார். பின்னர் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார்.இதுபற்றிக் கேரள தேவசம் சபை அமைச்சர் சுதாகரன் கூறும்போது “சபரிமலை விவகாரத்தில் புதிது புதிதாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. தந்திரி மீதான பயங்கர குற்றச்சாட்டு கேரள மக்களுக்கே பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. கேரள கலாசாரத்தையே அவர் அவமானப்படுத்தி விட்டார். இது குறித்து தேவசம் சபை முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்” குறிப்பிட்டார்.பின்னே இருக்காதா என்ன? ஆண்டொன்றுக்கு 75 கோடி உருபா வருமானமுள்ள மிகவும் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலய தலைமைப் பூசாரி பட்டப் பகலில் கோயில் பிரசாதத்தோடு பரத்தையர் வீட்டுக்குப் போகிறார் என்றால் அது கேரள கலாசாரத்துக்கு மட்டுமல்ல இந்து மதத்துக்கே பெரிய அவமானமாகும். சொர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசுரர்கள், பூசாரிகள், சாமியார்கள் விலைமகளிர் இருப்பிடங்களுக்குப் போய் பாலியல் தாக சாந்தி செய்து மாட்டிக் கொண்ட முதல் ஆசாமி இந்த தந்திரி மட்டும் என்றில்லை.

குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாகக் கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன என முறைப்பாடுகள் வந்தன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை இரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர். அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப் பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க.. அது அப்படியே வீடியோவில் பதிவாகி விட்டது.வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி ஆக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷ்க்கு அனுப்பி விட்டனர்.அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தௌ்ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர், பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் உருத்திராட்சம், மார்பில் ப+ணூல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, 'விளக்கை அணைக்கவேண்டாம் ப்ளீஸ்.. அது எரியட்டும்” என்று தடுக்க, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். 'வேண்டாமே” என்று மறுக்கும் ரூபலை, தனது வாயில் விரலை வைத்தபடி 'மூச்"; என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரண்டு பிடிக்கும் அந்தப் பெண்ணிடம் முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்து கொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியார் சந்த் உள்ளே நுழைகிறார். தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்துவிடுகிறது. இந்தச் சம்பவம் நடந்தது எப்போது என்ற தெளிவான விவரம் ஏதும் தங்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை என்கிறது சந்தேஷ் பத்திரிகை.இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக்கொண்டது. கோயிலினுள் காமோற்சவம் நடத்திய சாமியார்கள் இருவரும் தங்களது அந்தரங்கம் அம்பலமானதையடுத்து அங்கேயிருந்து தப்பியோடிவிட்டனர். ரூபல் என்ற அந்தப் பெண்ணும் தலைமறைவாகி விட்டார். சாமியார்கள் இருவரும் கோயிலுக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பெண்களையும், தங்களது குடிலுக்கு வர வழைத்து அனுபவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமி நாராயன் கோயிலுக்குப் பெண்களின் வரத்துக் கணிசமாகக் குறைந்து விட்டிருக்கிறது.இவை நடந்தது 2004 நொவெம்பரில். இப்போது கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.காந்தியார் கோயில்கள் விபச்சார விடுதியென்று சொன்னார்! அவர் வாய்க்குச் சர்க்கரையைத் தான் கொட்ட வேண்டும். மதம் ஒரு போதை. கடவுள், பக்தி, கோயில், குளம், ஜீவாத்மா - பரமாத்மா, நரகம் -சொர்க்கம் போன்றவை பக்திப் போதையை விற்பனை செய்யப் பயன்படுத்தும் வசீகரமான வார்த்தை சாலங்கள்! மனித சிந்தனைக்கு விலங்கிட்டு மனிதனை விலங்காகவே ஆக்கும் ஒரு வகை மூளைச் சலவை!

நடிகை ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டுக் கும்பிட்டதால் அய்யப்பனுக்குத் தீட்டு என்று சொல்லி பெரிய பொருள்செலவில் பரிகாரம் செய்யப்பட்டது. இப்போது தந்திரியால் அய்யப்பனுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதற்கும் பரிகாரம் செய்யப்போகிறார்களாம்! பாவம் அய்யப்ப பக்தர்கள். இவற்றை எல்லாம் படித்து விட்டு அவர்கள் அவமானத்தால் குளம், குட்டை ஒரு முழக் கயிறு, ஒரு துளி விஷம் ஆகியவற்றைத் தேடுவார்கள் என்று யாரும் நினைத்தால் அவர்கள் ஏமாறுவார்கள். பக்தி போதை அவ்வளவு சுலபத்தில் முறிந்துவிடாது!


அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!

திருமகள்

சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்! ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?

இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்!அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது?அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்!யார் இந்த உன்னிவிருஷ்ண பணிக்கர்?அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் அய்யப்பன் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது என்கிறார். யார் அந்தப் பெண்? பெண் தொட்டு அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றால் அய்யப்பiனைவிட அந்தப் பெண்ணுக்கு அதிக சக்தி இருக்கிறது என்றல்லவா பொருள்? சூனாமானக்காரன் போல் பேசாதே! நாத்தீகம் பேசினால் நாக்கு அழுகிச் சாவாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார். அந்தப் பெண் ஜெயமாலா என்ற கன்னட நடிகை, அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். அப்போதுதான் அந்த நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார்!கோயில் பூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக் கூடாது? பெண் கும்பிடக் கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?விபரம் தெரியாமல் பேசாதே! ஜெயமாலா பெண். அய்யப்பன் சாமிக்குப் பெண் என்றால் பிடிக்காது! பெண்கள் கோயில் பக்கம் போகக் கூடாது! ஏன் அப்படி? சிவபெருமான் தனது உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள்
சொல்கிறார்களே? அதாவது அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாராமே? அது புளுகா? ஓய்! சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். எனவே அவருக்குப் பெண்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது. அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது. அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தோசம் ஏற்பட்டுவிட்டது என்றால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, பூசை எல்லாம் சுத்த றயளவந இல்லையா? ஆமாம்! தீட்டு நீங்க கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டுமஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போதும் சுவாமிக்குத் தீட்டுப் பட்டுவிட்டதென்றுதானே பக்தர்கள் புலம்பினார்கள்? கடவுளர் கோயிலைவிட்டே ஓடிவிட்டதாகத்தானே பக்தர்கள் அலம்பினார்கள்?

ஓய்! தெரியாமல் பேசாதேயும். தீட்டுப் போகத்தானே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்கிறோம்! கும்பாபிஷேகம் செய்வதால் நாய், கோழி, பஞ்சமர் நுழைவதால் தீட்டுப்பட்டுப் போன கோயில் புனிதம் அடைகிறது!

கன்னட நடிகை ஜெயமாலா போல இன்னொரு கிறித்தவ மத நடிகை இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து கும்பிட்டதால் புனிதம் கெட்டுவிட்டதாமே?ஆமாம்! கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த யூன் 29 ஆம் நாள், கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தளிபரம்பாவில், இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும் இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு காணிக்கை செலுத்தினார். இதையடுத்து தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்ட அவர் புனிதப்படுத்தும் சடங்குகளுக்காக கோயில் நிருவாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்தார். கோயிலைப் புனிதப்படுத்துவதற்காக 10 தந்திரிகளைக் கொண்டு இரண்டு நாள்கள் "சுத்தி திரவிய கலச' பூஜை நடத்தக் கோயில் நிருவாகம் முடிவு செய்தது. இதற்கு ரூ.25 ஆயிரம் ஆகும் எனக் கோயில் நிருவாகம் சொன்னதால் மேலும் ரூ.15 ஆயிரம் தர மீரா ஜாஸ்மின் ஒப்புக் கொண்டுள்ளார். சபரிமலையில் ஊழல் செய்வதற்காகவே தேவசம் சபையும், தந்திரியும் (பூசாரியும்) உன்னிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தேவப்பிரஸ்னம் நடத்தியுள்ளனர் என்று பந்தளம் அரண்மனை வட்டாரம் குற்றம் சாட்டியுள்ளதே?அதில் உண்மை இல்லை. வெறும் கட்டுக் கதை! பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்பது அய்தீகம். அய்யப்பன் வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு. கோயில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து சுவாமி சிலையைத் தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது. எனவே உன்னிகிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் கூட்டுச் சேர்ந்து எதற்காகவோ நாடகமாடுகிறார்கள் என்று கோயில் தந்திரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உன்னிகிருஷ்ண பணிக்கரோ தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமலேயே பூசை செய்கிறார்கள். மீறிக் குளித்தாலும் குழாய்த் தண்ணீரில் குளிக்கிறார்கள், ஆசார நியமனம் ஒன்றும் பார்ப்பதில்லை, மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை இதனால் சபரிமலையின் புனிதம் இவர்களால் கெட்டுவிட்டது.

அய்யப்பன் பயங்கரக் கோபத்தில் இருக்கிறார் எனப் பதிலுக்கு உன்னிகிருஷ்ண பணிக்கர் குற்றம் சாட்டுகிறார். தந்திரியும் மேல் சாந்தியும் நம்பூதிரிப் பிராமணர்கள். உன்னிகிருஷ்ண பணிக்கர் அவரது பெயரில் காணப்படும் சாதியைச் சேர்ந்தவர். எனவே இந்தச் சண்டை பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்ற மட்டத்திலும் நடைபெறுகின்றது.இதற்கிடையில் நடிகை ஜெயமாலா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்ற பூசாரி தெரிவித்துள்ளார். தான் பிரஸ்னம் நடத்திப் பார்த்த போது கோயிலுக்குள் பெண் வந்து போனதும் கூடவே கள் வாசனை இருப்பதும் தெரிந்ததாக உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறுகிறார்.சபரிமலைக்கு யாத்திரை போகும் அய்யப்ப பக்தர்கள் 48 நாள் மச்சம், மாமிசம், கள், சாப்பிடக் கூடாது. காலில் செருப் பணியக் கூடாது, உடல் உறவு வைக்கக் கூடாது. உறவினர் யாராவது இறந்தால்கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. ஆனால் பல பக்தர்கள் தலையில் இருமுடியும் இடுப்பில் மதுப் போத்தலோடுதான் மலை ஏறுகிறார்களாம்!

அய்யப்ப பக்தர்களில் பிரசித்தி பெற்றவர் நடிகர் நம்பியார். கடந்த 56 ஆண்டுகளாகச் சபரிமலைக்குப் போய்வருகிறார். ஆனால் அவர் ஒரு முடாக் குடிகாரர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலோர் ஆண்டில் 360 நாளும் பாபம் செய்து விட்டு 5 நாள் மட்டும் அதனைக் கழுவ நோன்பு இருக்கிறார்கள். அய்யப்பன் வழிபாடு தமிழனுக்குப் புதியது. தமிழ்நாட்டுக்குப் புதியது. அய்யப்பன் ஆகமத்தில் சொல்லப்படாத கடவுள். கடந்த 50 ஆண்டுகளாகத்தான் “சாமியே சரணம் அய்யப்பா” கூச்சல் கேட்கிறது. அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். தில்லை நடராசருக்குத்தான் நோன்பு இருந்தான். இந்த கேரள இறக்குமதியால் பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, பழைய சேர நாட்டின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க சபரிமலைச் செலவை ஒரு சாக்காக வைத்துள்ளார்கள். அதைப் பார்த்துவிட்டு ஏழையும் கடன்பட்டாவது மலை ஏறுகிறான். கார்த்திகை மார்கழியில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த கார்த்திகை மார்கழி வரையிலும் நீள்வதும் உண்டு. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார் குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர் குறைந்துவிட்டதா? என்று. எதிலும் புதியதைத் தேடும் தமிழன் மனம் புதிய புதிய கடவுளையும் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின. இன்று மலையாள ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம் தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது.

இன்று இந்தியாவில் உள்ள பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஏழுமலையானை வழிபட நாள் தோறும் 50,000 அடியார்கள் மலை ஏறுகிறார்கள். ஏழுமலையானுக்கு நாளும் 100 கோடி பெறுமதியான தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நவரத்தினம், கோமேதகம் போன்ற விலை உயர்ந்த வைர ஆபரணங்களை அணிவித்துப் புதிய பட்டு ஆடையால் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுள்ள இலட்டுகள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் படைக்கப்பட்டு பின் அடியார்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழுமலையானின் நிரந்தர வைப்பு நிதி 2835 கோடியை எட்டியுள்ளதாம். கடந்த 2 ஆண்டுகளில் ரூ 500 கோடி அதிகரித்துள்ளது. ஏழுமலையானின் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் ரூ600 கோடி. இதற்கான வருவாயில் ரூ 230 கோடி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி என்கிறது தேவஸ்தானம். தினந்தோறும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வங்கியில் பணம் செலுத்தும் ஒரே நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டும்தான் என்பது மனங்கொள்ளத்தக்கது. திருப்பதி ஏழுமலையானோடு சபரிமலை அய்யப்பனை ஒப்பிட்டால் பின்னவர் “ஏழை”தான். ஆண்டு வருமானம் 75 கோடி மட்டுமே. கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது. சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுதப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி அசுத்தமாகிக் குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது. இந்த அய்யப்பசாமி வேடம் ப+ண்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும் வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி.. சாமி.. என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவும் கிடைக்கிறது. அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 40 கிமீ தூரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவஸ்வம் சபை பம்பை - நீலிமலையேற்றம் அப்பாச்சி மேடு - சபரிமலை நடைபாதயில் 18 இடங்களில் உயிர்க்காற்று சுவாச மையங்களை அமைத்துள்ளது. இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது துளிகூடப் பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா? காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது பக்தர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா? அய்யப்பன் கதை அறிவுக்குப் பொருந்தாதது, அருவருப்பானது, எந்தப் பயனையும் தராதது என்பதால் இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படிக் குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டி இருக்கிறார்கள். அதைப் பார்த்தாவது தமிழன் திருந்தக் கூடாதா? (முழக்கம் - யூலை 2006)